Saturday, January 9, 2010

கொஞ்சம் மழை..நிறைய புன்னகை..!!!


 அன்றொரு மழைநாளில் உன்னை
சிரித்தபடி பார்த்திருந்தாலும்....
இன்றும் பூமியில் விழும்
ஒவ்வொரு மழை துளியும்
 நினைவுபடுத்துகிறது 
நீ எங்கேயோ சிரித்து கொண்டிருப்பாய் என்பதை...!!!
 
ஏனோ தெரியவில்லை .,
நான் மழையின் ரசிகனா..
   இல்லை தேவதையின் ரசிகனா...
ஏன் எனில் நீ சிரிக்கும் ஒவ்வொரு முறையும்
 நான்  நனைகிறேன்..!!!

நீ நனைகையில் சிந்திய புன்னகையை
     எனக்கு தந்துவிடும் என்ற
  நம்பிக்கையில்தான் நானும்
    நனைகிறேன் ஒவ்வொரு மழையிலும்...!!!

நனைந்தபடியே மழையை
   ரசிக்கும் உனையும்...
நனைத்தபடியே உன்னை
   ரசிக்கும் மழையையும்..
சிரித்தபடியே படம் எடுக்கிறது மின்னல்..!!

எங்கோ உன் புன்னகையை
   ரசித்த காற்றை
இங்கே நான் சுவாசிக்கிறேன்
    புன்னகைத்தபடியே..!!!

குழந்தையின் முதல் அம்மா..
   எத்தனை அழகோ
அத்தனை அழகாய் இருந்தது
    உன் முதல் புன்னகை...!!!
எங்கே கற்றுவந்தாய்
    இத்தனை அழகாய் புன்னகை செய்ய ..!!!

அதிகாலை சூரியன் உதயமே
   அழகான சிவப்பு என நினைத்திருந்தேன்
வெட்கத்தில் உன் கன்னம்
    சிவந்ததை காணும் முன்புவரை..!!!
..

நீ இல்லா நேரத்திலும்
   காதல் செய்வதற்காய்
நீ கொடுத்த பரிசில் மிச்சம் இருக்கிறது
   நமக்கான பழைய புன்னகை..!!!
                                   
           உங்கள் சேவகன்..,
 ..laajee..,

(உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதியது..