Friday, January 5, 2018

புன்னகை


காத்திருக்கிறேன்
அழகான ஒரு கவிதைக்கான
வார்த்தைகளுக்காய்
கண்கள் விரிய சிரித்துவிட்டு செல்லேன்
வார்த்தைகள் வந்து விழலாம்
அழகான உன் புன்னகை போலவே

                       ...பாலாஜி..,

Thursday, November 10, 2011

கடைசியின் தொடக்கம்..:


கடைசியின் தொடக்கம்..:

எனக்கும், பனத்திர்க்குமான இடைவெளி..
கூடிகொண்டே இருக்கிறது....!!

முயலுகையில் மூடிய பாதைமுழுக்க...
நான் முட்டியதால் சிந்திய ரத்தமே..!!

கட்டி அணைக்க ஆதரவு தேடுகையில்...
எட்டி உதைக்கும் எஞ்சிய நெஞ்சங்கள்...!!!

என்னடா வாழ்க்கைஎன்று ஏங்கி நிற்கையிலே...
கைநீட்டி நகைக்கிறது... குறிக்கோளும், கனவுகளும்...!!!

கனவுகளை கலைக்கவேண்டி கண்கலங்கி நிற்கையிலே...
காதோடு கேட்கிறது...  
இன்னும் ஒருமுறை முயன்று பாறேன்..!!!!

உங்கள் சேவகன், ..laajee..,

Tuesday, August 16, 2011

வளர்ந்தது வலிக்கிறது..!



பிறந்தது முதலே தொட்டு பார்த்த மரம்.
அம்மா அடிக்க வரும் ஒவ்வொருமுறையும்,
அதை சுத்தி ஓடியே தப்பித்த நாட்கள்.
மழை விட்டு தேங்கிய சொட்டு நீரை,
குழுக்கியதும் கொடுத்த இனியவன்.
தேன்கூடு அண்ட தேன் எடுக்க ஏறி
உடைந்த கிளையில் உணர்ந்த ரத்தம்.


பருவங்கள் மாறியபின்
பரிவுகளும் மாறின பார்வையில்.
வெகுநாட்கள் கழிந்து வீடு செல்கையில்,
நான் ரசித்த மரம் இன்றி
வெறுச்சோடி கிடக்கிறது வாசல்..!

விரக்தியுடன் அம்மாவை கேட்க,
போன செமஸ்டர் பணம்
அந்த மரத்த வித்துதண்டா கட்டினோம்..!


வெளிவந்து வெம்புகையில் உணர்ந்தேன்
அடிக்க அம்மாவும் இல்லை
அரவணைக்க மரமும் இல்லை
வேர்மட்டும் இன்னும் மண்ணிலே
எனக்கு மட்டுமே தெரிந்த
காய்ந்து போன ரத்தத்துடன்...!


தெருவில் போறவர்களின் ஓசை,
இன்னும் ஒலித்தபடியே..
என்னமா வளந்துட்டான்ல...
வேப்பமரத்து வீட்டு புள்ள...!!!


                                        உங்கள் சேவகன்..,
                                                        ..laajee ..,

Friday, June 3, 2011

தேவதை..!!

 
 
 
நீ நெருக்கமாய் வரும் ஒவ்வொரு முறையும்,
நான் தூரமாய் செல்கிறேன்,
கனவு தேசம் தேடி...
தேவதை நெருங்கி வந்தால்,
எப்படி நினைவென நம்புவது!
 
உங்கள்  சேவகன்,
                                                                                                                                                             ..laajee..,
 

Wednesday, September 15, 2010

DOES HEAVEN HAVE A PHONE NUMBER?






Mommy went to Heaven, but I need her here today,

My tummy hurts and I fell down; I need her right away,

Operator, can you tell me how to find her in this book?

Is heaven in the yellow part? I don't know where to look.

I think my daddy needs her too; at night I hear him cry.

I hear him call her name sometimes, but I really don't know why.

Maybe if I call her, she will hurry home to me.

Is Heaven very far away, is it across the sea?

She's been gone a long, long time; she needs to come home now!

I really need to reach her, but I simply don't know how.

Help me find the number please, is it listed under "Heaven"?

I can't read these big, big words; I am only seven.

I'm sorry, operator, I didn't mean to make you cry,

Is your tummy hurting too, or is there something in your eye?

If I call my church maybe they will know.

Mommy said when we need help, that's where we should go.

I found the number to my church tacked up on the wall.

Thank you operator, I'll give them a call.


         "Thanks a lot for the Great Author.."

Friday, September 3, 2010

நம்பிக்கையாய் ஓரு பயணம்

                   




(laajee -இன் டைரியில் " நம்பிக்கையாய் ஓரு பயணம் " என்ற கதை தொகுப்பில் இருந்து ஓரு கதை உங்களுக்காய் உங்கள் அன்பிற்காய், வாழ்கையின் அற்புதம் அறிவதற்காய்..)


அன்றொரு நாள்..!!
                                          எங்கு நோக்கினும் பட்டாசு வெளிச்சம், வெடித்து சிதறிய காகிதக்குவியல் அதை கடந்து குதூகலமாய் நடக்கும் பல புன்னகை முகங்கள். அடுத்த ஆர்ப்பாட்டத்திர்க்காய் ஊதுபத்தியை தயார் செய்யும் சிறுவர்கள், அவர்களை சுற்றி காதுகளை பொத்த ஏதுவாய் ஓரு புன்னகை கூட்டம். அழகாய் ஆம் மிக அழகாய் தெரிந்தது அன்று தீபாவளி நாள் அந்த "14" வயது சிறுவனை காணும் முன்பு வரை.
       அழகாய் ஓரு முகம், நேர்த்தியாய் சீவப்பட்ட முடி, நீல கால் சட்டை வெள்ளை மேல் சட்டை போட்டிருந்தான். பார்த்தவுடன் புரிந்து கொள்ளக்கூடிய ஏக்கம் அவனின் கண்களில் தெரிந்தது, சிரிக்க முயற்சித்து தோற்று கொண்டிருந்த மனதை உதடு புரியவைத்தது அந்த பள்ளி சீருடையை அணிந்த காரணமாய் இருக்கலாம் என்பதை. பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சிரிக்க முயற்சித்து தோற்று கொண்டிருந்தான். அவனை மட்டுமே பார்க்க தூண்டியது மனம், அத்தனை ஏக்கமாய் ஓரு முகம், இதுவரை காணாத ஓரு சோக வலிகொண்ட முகம்.
        அங்கிருந்த சிறுவர்கள் அவர்களுடுய வீட்டில் செய்திருந்த தின்பண்டங்களை உன்னவாறே விளயாடிகொண்டிருந்தார்கள் இந்த சிறுவனை தவிர. நேர விழுங்கலில் ஓரு சிறுவனின் கையில் இருந்த லட்டு கீழே மண்ணில் விழவே! அவன் அடுத்ததை கொண்டு வர வீடு நோக்கி ஓடினான். ஏக்கமாய் நின்றிறிந்த இவனின் முகத்தில் அத்துனை பிரகாசம் ஆசை ஆசையாய் லட்டை மண்ணில் இருந்து எடுத்து தனது கால் சட்டையில் துடைத்தான், எத்துனை உற்சாகம் அவன் செயலில் புரிந்து கொண்டேன் நான் மட்டுமே, அங்கே இருந்த மனிதர்கள் அவனை ஓரு புழுவென நினைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்கள். அத்துனை ஆசையாய் அவன் உன்ன தொடங்கிய நேரத்தில் எத்தனை முகங்கள் பார்த்தும் அந்த வலி அவர்களுக்கு தெரியவில்லை யாரோ பாலா என்று அழைத்ததும் திரும்பினான் அது அவன் அம்மா என்பதை பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. இவனது செயலை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்திருப்பார் போலும் கண்கள் முழுக்க அவமான கண்ணீருடன் அவனை அரவணைத்து அழுதார்..
     காலமும் அது கவர்ந்து வரும் கண்ணீரும்தான் எத்துனை வலிமையானது.! இருவர் கண்களிலுமே கண்ணீர், இருவருமே கடவுளை நினைத்திருப்பார்கள் ஆனால் அதில்தான் எத்துனை மாறுபாடு இருந்திருக்கும்..!! அந்த சிறுவன் தனக்கு எப்படியோ இன்று ஓரு லட்டு கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொல்லியிருப்பான்,,
      அந்த அன்னையோ தன மகனுக்கு ஓரு இனிப்பு கூட செய்து கொடுக்க முடியாத ஏக்கத்தில் கடவுளை நொந்து மன்றாடிய ஏக்கமான கண்ணீருடன். உயிரை மொத்தமாய் குடித்துவிடும் வலி கொண்ட கடினமான தருணத்தில் வரும் கண்ணீருக்கும் அது கொண்டுவரும் வார்த்தைகளுக்குதான் எத்தனை வலிமை..!!! அன்று உணர முடிந்தது.
          அந்த அன்னை சிறுவனை அந்த மின்சார வசதியற்ற இல்லத்திற்குள் அழைத்து சென்று அடுத்த நாள் சாப்பட்டிர்க்காய் இருந்த அரிசியை இடித்து மாவாக்கி, பக்கத்து வீட்டில் கொஞ்சம் தேங்காய் கடன் வாங்கி ஏதோ உருண்டை செய்து கொடுத்தார். அதை உண்ணுகையில் அந்த பிஞ்சிர்க்குதான் எத்தனை சந்தோஷம்! அந்த சந்தோஷ தருணத்தில் தன் அத்துனை வருட வலி, ஏக்கம், அவமானம், கஷ்டம் என அத்துனையையும் ஒன்று சேர்த்து அறிவுரை இல்லை இல்லை உயிர் உரை சொல்ல தொடங்கினார் அந்த தாய்.
      பாலா, நானும் உன் தந்தையும் உனக்கான ஏக்கத்தையும் அவமானத்தையும் அறிந்தும் உதவ நாதியற்று நிற்கிறோம், ஆனால் நீ அப்படி இல்லை மகனே..!! அனாதை இல்லத்தில் படிக்கிறாய் வலிகளை அதிகம் கற்கிறாய், காலையில் சூரியனுக்கு முன்பு எழுகிறாய்  ஆனால் சூரியன் மறைந்து வெகு நேரம் கழிந்துதான் உறங்குகிறாய் உனக்கு தெரியாமலே  நீ தினமும் சூரியனை வெற்றிகொல்கிறாய் ..
        அந்த சூரியனை மனிதர்கள் உலகம் முழுக்க பார்கிறார்கள், அதன் பெயர் உலகம் முழுக்க உட்சரிக்க படுகிறது, அது உலகிற்கு பல சந்தோஷ தருணங்களை தருகிறது. இருந்தும் அது உன்னிடம் தினம் தோற்று போகும் சூரியன். வெல்லும் நீ என் பிள்ளை. பல கஷ்டங்களை படித்தவன் பலர் தூக்கி எரிந்ததை உணவாக உண்பவன். சூரியன் நுழையாத இடத்தில் கூட உன் புகழ் நுழைய வேண்டும், இன்று ஓரு லட்டு கிடைத்ததற்காய் நீ சிரித்தாய் இனி வரும் நாளில் உன்னால் பலர் உன்ன நீ உதவ வேண்டும், நான் என்றோ இறந்திருப்பேன் ஆயினும் உன்னை இந்த உலகம் கொண்டாடப்போகும் ஓரு நாளுக்காகவே வாழ வழிதேடி கொண்டிருக்கிறேன்..!
          இந்த உலகின் ஒட்டுமொத்த தலைப்பு செய்தியாய் நீ மாறும் நாளிர்க்காய் நான் காத்துகொண்டிருப்பேன், பாலா எனக்கான ஓரு சந்தோஷ நாள் என்றால் அது வரப்போகும் அந்த நாள்தான், நம் கண்ணீரை மறந்துவிடாதே ராசா., பசியால் நாம் அழுவதை மறந்துவிடாதே கண்ணா.! மிக அழகாய் அனுபவமாய் சொல்லி முடித்தார் அந்த தாய்.
      அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் நடக்க தொடங்கினான் அந்த சிறுவன், அவனை யாதென்று கேட்க்க கூட யாருமில்லை அங்கே, காற்றும் நானும் மட்டுமே பார்த்திருப்போம் அந்த பால்யத்தின் கதறலை தனிமையின் கரத்துடன்.. 
       "8" வருடங்கள் ஓடி விட்டது, வாழ்க்கையும் வரலாறும் பல வெற்றியாளர்களை தன்னுடன் சேர்த்து கொண்டிருக்கிறது. அந்த சிறுவனின் பெயரை காண ஆவலுடன் பலர் வாழ்கிறார்கள் என்பதை காண்கிறேன்.
              அவனையும், அவன் வளர்ச்சியையும் காணும் பொழுதெல்லாம் அந்த தாய் சந்தோஷமாய் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார், அவனின் ஒவ்வொரு வெற்றியிலும் அந்த தாயுடன் சூரியனும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனி எந்த ஓரு வரலாற்று பக்கமும்  தடுக்க முடியாத வளர்ச்சி பாதையில் அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பதை காணும் பொழுதெல்லாம் எனக்குள் அந்த நாட்களின் சோகங்கள் நிழலாய் வந்து போகிறது.
                        அவன் அறியாமலே அவனது வெற்றியில் புன்னகை செய்ய விரும்பும் காற்றின் கலவை நான் என்பதற்காய் கடவுளுக்கும் அந்த அன்னைக்கும் நன்றி சொல்லியவாறே காற்றுடன் கலந்து பயணிக்கிறது எனக்கான ஒவ்வொரு நாளும். ஏனோ அன்றைய அந்த சிறுவனின் கண்ணீரும், ஏக்கமும் இன்றும் அவ்வப்போது மழைத்துளியாய் உதிர்கயிலே காற்றின் கலவையாய் நான் கலங்கி போகிறேன். ஒருவேளை அந்த அன்னை மகிழும் ஓரு நாளில் அந்த மழைத்துளிகள் சந்தோஷ சலனமாய் என்னில் கலக்கலாம். அன்று அந்த பால்யத்தின் கதறல் வரலாற்றில் பதிந்து விடும் ஓரு நாளில் அதை படிக்கும் உள்ளங்களின் கண்ணீரை காற்றின் கலவையோடு  நான் துடைக்கலாம் நம்பிக்கையுடன் உங்களில் ஒருவனாய் உலகை மாற்ற போகும் ஓரு சரித்திரம் காண ஏதுவாய் நான், உடலற்ற ஓர் உயிர் கலவையாய் காற்றின் வழியெங்கும்...,
 
 
                                                                                                                                                    உங்கள்  சேவகன்,
                                                                                                                                                             ..laajee..,
                            

Saturday, March 27, 2010

விவசாயம் ஓரு பார்வை:


விவசாயம் ஓரு பார்வை:

...
   பறவைகள் கவி பாடும் கீஷ்வானம் சிவந்த ஓரு காலை பொழுது, அதோ சற்று தொலைவில் எனது விவசாய தோழர் கையில் மண்வெட்டியுடனும்,
மனதில் கனவு என்ற கனத்துடனும் உடலில் வறுமையின் கோடுகள் தெரிய தனது வயலை நோக்கி நடந்து செல்லும் சோகம்! மண்வெட்டியை ஆயத்தமாக்கி வயலில் இறங்கியவரின் கைகளில் சிறிது நடுக்கம் கண்களோ நிரம்பி இருந்தது நீரால், மண்வெட்டியை கீழே வைத்து விட்டு கலக்கத்துடன் அமரும் தோழர் நினைவுகளை சற்று பின்னோக்கி செலுத்துகிறார்..,!

 
கடந்த வருடம் இதே வயலுக்காக உரம் வாங்க வைக்கப்பட்ட மனைவியின் நகையோ அடகு கடையில் கழுத்து வரை மூழ்கிவிட்ட நிலையில்!
அது பத்தாமல், அடுத்த அறுவடையில் தருகிறேன் என கூறி ஊர் வெல்லாமயிடம் பணம் வேறு வாங்கியாயிற்று!!
இவை போதாது என்பது போல், மகனின் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய 3 மாத பாக்கி பணம், அவன் இரண்டு நாளாய் பணம் கேட்டு வீட்டில்!! இருந்த தாலியையும் கடந்த முறை வைத்து பணம் கட்டினதால் வேறு வழி இல்லாமல் மனைவியும் அமைதியாய் ,,..,!
அனைவரும் அவர்களுக்குக்கானவற்றை இவரிடம் புலபியயிற்று! பாவம் இவர் யாரிடம் புலம்புவார் கடவுளிடமா? 

 
               வேலை முடிந்து வீடு திரும்புகையில் கைகளால் கண்களை துடைத்தபடியே ஓரு கலைத்த நடை,,!
வீட்டில் மனைவி,மகன் இருவரும் ஏக்க பார்வையுடன் இவரின் பொன் வார்த்தைக்காக... பாவம் விவசாயி, வானம் பொய்த்ததிர்க்கு அவர் என்ன செய்வார்?
விளைந்த நெல்லில் கடனும், மகனின் கட்டனுமும் முடிந்துவிடும்!
மனைவிக்கும், உண்பதற்கும் என்ன செய்வதாம்?
யோசனையுடன் மனைவி சாப்பிட கூப்பிடுவது கூட கேட்க்காமல் நடக்கிறார், சோற்றுக்காக அடுத்தவர் வயலில் வேலை செய்ய....,
அனைத்து நம்பிக்கையும் பொய்த்து விட்ட அவர்க்கு கடைசியான மிச்சம், மகன் எப்படியும் நம்மை காப்பாற்றுவான் என்பதுதான்!!
          அவர் உயிர் மிஞ்சி இருப்பதும் அந்த நம்ம்பிக்கயால்
தான்!!!!!,



                                                                               உங்கள் சேவகன்,

                                                                                          -laajee..,

நீ என்றால் காதல்..!!!


காதலுக்கு விளக்கம் என்று
பலரும் பலவற்றை சொல்கிறார்கள்...!!!

வென்றவர்களுக்கு காதல் என்றால்
சந்தோஷம்..!!

தோற்றவர்களுக்கு காதல் என்றால்..
கண்ணீர்..!!!

காதலிக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அழகு..!!!

காதலிக்கப் படுபவர்களுக்கு ...
காதல் என்றால் சொர்க்கம்...!!

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு...
காதல் என்றால் புன்னகை..!!!

புன்னகைக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அற்ப்புதம்..!!!

அன்பு தேடுவோருக்கு
காதல் என்றால் அம்மா...!

அம்மாவை தேடுவோருக்கு..
காதல் என்றால் கடவுள்..!!

உலகின் பார்வையில்
காதல் பலவிதம்தான்...
ஆனால் எனக்கு என்றுமே..
              ..காதல் என்றால் நீ...
நீ என்றால் காதல்..!!!



                   .. உங்கள் சேவகன்..,
                                     ..laajee..,

அம்மா.!


..
 கடவுள் இல்லை என்று
யார் இங்கு சொன்னாலும்
கடவுளை நம்ப ஓரு வாய்ப்பு தந்த
கடவுள் அது அம்மா..,

அம்மா, அம்மா என்று
ஆசையாய் எத்தனைமுறை அழைத்தாலும்
பாசமாய் புன்னகை சிந்தும் ஓரு
அதிசயம் அது அம்மா.,!

அனாதைகள் என்று ஒதுக்கிய
உலகம் மறந்து உறங்கையிலே
கனவின் மீதி
யாய் கண்கலோர கண்ணீரில்
என்றும் ஆதரவாய் ஓரு சொந்தம் அது அம்மா..!!

தோல்வியால் நாம் அழுகையிலேயே மடிசாய்த்து..
உன்னால் மட்டுமே முடியும் எனசொல்லி..
நம் கண்ணீர் துடைத்தபடியாய் கண்ணீர் சிந்தும்...
கவிதை அது அம்மா..,

என்றேனும் முதியோர் இல்லம்வரும் பிள்ளைக்காய்...
அழுத மனம் முழுக்க ஆசிதந்து...
குழந்தையாய் புன்னகைத்தபடியே....
குதூகலிக்கும் குழந்தை அது அம்மா.., 


                 உங்கள் சேவகன்...
                               ..laajee..,

தனிமை பிடித்திருக்கிறது...!


...
தனிமை பிடித்திருக்கிறது
மனம் விட்டு சிரிக்க..
இதயம் திறந்து அழுக...
காற்றோடு பேச...
மழையோடு நனைய...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
பழைய நினைவுகளோடு
பயணம் செய்ய...
பூக்களின் நறுமணம் நுகர.....
அழகான பட்டாம்பூச்சி பிடிக்க..
அன்பான அம்மாவை நினைக்க...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
புன்னகைக்கும் குழந்தையை ரசிக்க...
ஆசையாய் கவிதை எழுத....
காதலின் ஆழம் அறிய...
என்னோடு துணை இருக்க...
எனக்கான தனிமை பிடித்திருக்கிறது..!!!

                                           உங்கள் சேவகன்...
                                                       ..laajee..,