Tuesday, August 16, 2011

வளர்ந்தது வலிக்கிறது..!



பிறந்தது முதலே தொட்டு பார்த்த மரம்.
அம்மா அடிக்க வரும் ஒவ்வொருமுறையும்,
அதை சுத்தி ஓடியே தப்பித்த நாட்கள்.
மழை விட்டு தேங்கிய சொட்டு நீரை,
குழுக்கியதும் கொடுத்த இனியவன்.
தேன்கூடு அண்ட தேன் எடுக்க ஏறி
உடைந்த கிளையில் உணர்ந்த ரத்தம்.


பருவங்கள் மாறியபின்
பரிவுகளும் மாறின பார்வையில்.
வெகுநாட்கள் கழிந்து வீடு செல்கையில்,
நான் ரசித்த மரம் இன்றி
வெறுச்சோடி கிடக்கிறது வாசல்..!

விரக்தியுடன் அம்மாவை கேட்க,
போன செமஸ்டர் பணம்
அந்த மரத்த வித்துதண்டா கட்டினோம்..!


வெளிவந்து வெம்புகையில் உணர்ந்தேன்
அடிக்க அம்மாவும் இல்லை
அரவணைக்க மரமும் இல்லை
வேர்மட்டும் இன்னும் மண்ணிலே
எனக்கு மட்டுமே தெரிந்த
காய்ந்து போன ரத்தத்துடன்...!


தெருவில் போறவர்களின் ஓசை,
இன்னும் ஒலித்தபடியே..
என்னமா வளந்துட்டான்ல...
வேப்பமரத்து வீட்டு புள்ள...!!!


                                        உங்கள் சேவகன்..,
                                                        ..laajee ..,