(laajee -இன் டைரியில் " நம்பிக்கையாய் ஓரு பயணம் " என்ற கதை தொகுப்பில் இருந்து ஓரு கதை உங்களுக்காய் உங்கள் அன்பிற்காய், வாழ்கையின் அற்புதம் அறிவதற்காய்..)
அன்றொரு நாள்..!!
அழகாய் ஓரு முகம், நேர்த்தியாய் சீவப்பட்ட முடி, நீல கால் சட்டை வெள்ளை மேல் சட்டை போட்டிருந்தான். பார்த்தவுடன் புரிந்து கொள்ளக்கூடிய ஏக்கம் அவனின் கண்களில் தெரிந்தது, சிரிக்க முயற்சித்து தோற்று கொண்டிருந்த மனதை உதடு புரியவைத்தது அந்த பள்ளி சீருடையை அணிந்த காரணமாய் இருக்கலாம் என்பதை. பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சிரிக்க முயற்சித்து தோற்று கொண்டிருந்தான். அவனை மட்டுமே பார்க்க தூண்டியது மனம், அத்தனை ஏக்கமாய் ஓரு முகம், இதுவரை காணாத ஓரு சோக வலிகொண்ட முகம்.
அங்கிருந்த சிறுவர்கள் அவர்களுடுய வீட்டில் செய்திருந்த தின்பண்டங்களை உன் னவாறே விளயாடிகொண்டிருந்தார்கள் இந்த சிறுவனை தவிர. நேர விழுங்கலில் ஓரு சிறுவனின் கையில் இருந்த லட்டு கீழே மண்ணில் விழவே! அவன் அடுத்ததை கொண்டு வர வீடு நோக்கி ஓடினான். ஏக்கமாய் நின்றிறிந்த இவனின் முகத்தில் அத்துனை பிரகாசம் ஆசை ஆசையாய் லட்டை மண்ணில் இருந்து எடுத்து தனது கால் சட்டையில் துடைத்தான், எத்துனை உற்சாகம் அவன் செயலில் புரிந்து கொண்டேன் நான் மட்டுமே, அங்கே இருந்த மனிதர்கள் அவனை ஓரு புழுவென நினைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்கள். அத்துனை ஆசையாய் அவன் உன்ன தொடங்கிய நேரத்தில் எத்தனை முகங்கள் பார்த்தும் அந்த வலி அவர்களுக்கு தெரியவில்லை யாரோ பாலா என்று அழைத்ததும் திரும்பினான் அது அவன் அம்மா என்பதை பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. இவனது செயலை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்திருப் பார் போலும் கண்கள் முழுக்க அவமான கண்ணீருடன் அவனை அரவணைத்து அழுதார்..
காலமும் அது கவர்ந்து வரும் கண்ணீரும்தான் எத்துனை வலிமையானது.! இருவர் கண்களிலுமே கண்ணீர், இருவருமே கடவுளை நினைத்திருப்பார்கள் ஆனால் அதில்தான் எத்துனை மாறுபாடு இருந்திருக்கும்..!! அந்த சிறுவன் தனக்கு எப்படியோ இன்று ஓரு லட்டு கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொல்லியிருப்பான்,,
அந்த அன்னையோ தன மகனுக்கு ஓரு இனிப்பு கூட செய்து கொடுக்க முடியாத ஏக்கத்தில் கடவுளை நொந்து மன்றாடிய ஏக்கமான கண்ணீருடன். உயிரை மொத்தமாய் குடித்துவிடும் வலி கொண்ட கடினமான தருணத்தில் வரும் கண்ணீருக்கும் அது கொண்டுவரும் வார்த்தைகளுக்குதான் எத்தனை வலிமை..!!! அன்று உணர முடிந்தது.
அந்த அன்னை சிறுவனை அந்த மின்சார வசதியற்ற இல்லத்திற்குள் அழைத்து சென்று அடுத்த நாள் சாப்பட்டிர்க்காய் இருந்த அரிசியை இடித்து மாவாக்கி, பக்கத்து வீட்டில் கொஞ்சம் தேங்காய் கடன் வாங்கி ஏதோ உருண்டை செய்து கொடுத்தார். அதை உண்ணுகையில் அந்த பிஞ்சிர்க்குதான் எத்தனை சந்தோஷம்! அந்த சந்தோஷ தருணத்தில் தன் அத்துனை வருட வலி, ஏக்கம், அவமானம், கஷ்டம் என அத்துனையையும் ஒன்று சேர்த்து அறிவுரை இல்லை இல்லை உயிர் உரை சொல்ல தொடங்கினார் அந்த தாய்.
பாலா, நானும் உன் தந்தையும் உனக்கான ஏக்கத்தையும் அவமானத்தையும் அறிந்தும் உதவ நாதியற்று நிற்கிறோம், ஆனால் நீ அப்படி இல்லை மகனே..!! அனாதை இல்லத்தில் படிக்கிறாய் வலிகளை அதிகம் கற்கிறாய், காலையில் சூரியனுக்கு முன்பு எழுகிறாய் ஆனால் சூரியன் மறைந்து வெகு நேரம் கழிந்துதான் உறங்குகிறாய் உனக்கு தெரியாமலே நீ தினமும் சூரியனை வெற்றிகொல்கிறாய் ..
அந்த சூரியனை மனிதர்கள் உலகம் முழுக்க பார்கிறார்கள், அதன் பெயர் உலகம் முழுக்க உட்சரிக்க படுகிறது, அது உலகிற்கு பல சந்தோஷ தருணங்களை தருகிறது. இருந்தும் அது உன்னிடம் தினம் தோற்று போகும் சூரியன். வெல்லும் நீ என் பிள்ளை. பல கஷ்டங்களை படித்தவன் பலர் தூக்கி எரிந்ததை உணவாக உண்பவன். சூரியன் நுழையாத இடத்தில் கூட உன் புகழ் நுழைய வேண்டும், இன்று ஓரு லட்டு கிடைத்ததற்காய் நீ சிரித்தாய் இனி வரும் நாளில் உன்னால் பலர் உன்ன நீ உதவ வேண்டும், நான் என்றோ இறந்திருப்பேன் ஆயினும் உன்னை இந்த உலகம் கொண்டாடப்போகும் ஓரு நாளுக்காகவே வாழ வழிதேடி கொண்டிருக்கிறேன்..!
இந்த உலகின் ஒட்டுமொத்த தலைப்பு செய்தியாய் நீ மாறும் நாளிர்க்காய் நான் காத்துகொண்டிருப்பேன், பாலா எனக்கான ஓரு சந்தோஷ நாள் என்றால் அது வரப்போகும் அந்த நாள்தான், நம் கண்ணீரை மறந்துவிடாதே ராசா., பசியால் நாம் அழுவதை மறந்துவிடாதே கண்ணா.! மிக அழகாய் அனுபவமாய் சொல்லி முடித்தார் அந்த தாய்.
அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் நடக்க தொடங்கினான் அந்த சிறுவன், அவனை யாதென்று கேட்க்க கூட யாருமில்லை அங்கே, காற்றும் நானும் மட்டுமே பார்த்திருப்போம் அந்த பால்யத்தின் கதறலை தனிமையின் கரத்துடன்..
"8" வருடங்கள் ஓடி விட்டது, வாழ்க்கையும் வரலாறும் பல வெற்றியாளர்களை தன்னுடன் சேர்த்து கொண்டிருக்கிறது. அந்த சிறுவனின் பெயரை காண ஆவலுடன் பலர் வாழ்கிறார்கள் என்பதை காண்கிறேன்.
அவனையும், அவன் வளர்ச்சியையும் காணும் பொழுதெல்லாம் அந்த தாய் சந்தோஷமாய் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார், அவனின் ஒவ்வொரு வெற்றியிலும் அந்த தாயுடன் சூரியனும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனி எந்த ஓரு வரலாற்று பக்கமும் தடுக்க முடியாத வளர்ச்சி பாதையில் அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பதை காணும் பொழுதெல்லாம் எனக்குள் அந்த நாட்களின் சோகங்கள் நிழலாய் வந்து போகிறது.
அவன் அறியாமலே அவனது வெற்றியில் புன்னகை செய்ய விரும்பும் காற்றின் கலவை நான் என்பதற்காய் கடவுளுக்கும் அந்த அன்னைக்கும் நன்றி சொல்லியவாறே காற்றுடன் கலந்து பயணிக்கிறது எனக்கான ஒவ்வொரு நாளும். ஏனோ அன்றைய அந்த சிறுவனின் கண்ணீரும், ஏக்கமும் இன்றும் அவ்வப்போது மழைத்துளியாய் உதிர்கயிலே காற்றின் கலவையாய் நான் கலங்கி போகிறேன். ஒருவேளை அந்த அன்னை மகிழும் ஓரு நாளில் அந்த மழைத்துளிகள் சந்தோஷ சலனமாய் என்னில் கலக்கலாம். அன்று அந்த பால்யத்தின் கதறல் வரலாற்றில் பதிந்து விடும் ஓரு நாளில் அதை படிக்கும் உள்ளங்களின் கண்ணீரை காற்றின் கலவையோடு நான் துடைக்கலாம் நம்பிக்கையுடன் உங்களில் ஒருவனாய் உலகை மாற்ற போகும் ஓரு சரித்திரம் காண ஏதுவாய் நான், உடலற்ற ஓர் உயிர் கலவையாய் காற்றின் வழியெங்கும்...,
1 comment:
வலிகளில் வீழாமல்,
வாழ்ந்து வரும் பாலாவிற்கு,
வெற்றி வாழ்த்த வரும்,
வீடு தேடி...
வலிகள் சுமந்த இக்கட்டுரை
இதயத்தில் இறங்கிவிட்டது.
மனிதர் மனிதத்துடன் வாழ,
இறையை வேண்டிகிறேன்.
Post a Comment