Saturday, March 27, 2010

தனிமை பிடித்திருக்கிறது...!


...
தனிமை பிடித்திருக்கிறது
மனம் விட்டு சிரிக்க..
இதயம் திறந்து அழுக...
காற்றோடு பேச...
மழையோடு நனைய...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
பழைய நினைவுகளோடு
பயணம் செய்ய...
பூக்களின் நறுமணம் நுகர.....
அழகான பட்டாம்பூச்சி பிடிக்க..
அன்பான அம்மாவை நினைக்க...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
புன்னகைக்கும் குழந்தையை ரசிக்க...
ஆசையாய் கவிதை எழுத....
காதலின் ஆழம் அறிய...
என்னோடு துணை இருக்க...
எனக்கான தனிமை பிடித்திருக்கிறது..!!!

                                           உங்கள் சேவகன்...
                                                       ..laajee..,

1 comment:

சுரபி said...

தனிமை ரசிக்கும் காரணங்கள்..
ஹ்ம்ம்.. ;)
நல்ல முயற்சி தம்பி.. (கவிதையின் கருவை சொன்னேன்.. )
என்னால் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.. ஏனெனில் உன் போல் அழகானவையல்ல என் தனிமைகள்.. ஹிஹிஹி...

அக்கரைக்கு இக்கரை பச்சை.. :)

நல்ல இருக்கு.. தொடர்ந்து எழுது..