உண்ண உணவில்லாமல் தினமும் இறக்கும் பல ஆயிரம் குழந்தைகளுக்காய் அழும் உள்ளமா நீங்கள்? அப்படி ஆயின் உங்கள் பொற் பாதங்களை முத்தமிடும் உங்கள் சேவகன் நான்.. நான் என்றும் வாழ்வேன் உங்களுக்காய் உங்களோடு..,
Saturday, March 27, 2010
அம்மா.!
..
கடவுள் இல்லை என்று
யார் இங்கு சொன்னாலும்
கடவுளை நம்ப ஓரு வாய்ப்பு தந்த
கடவுள் அது அம்மா..,
அம்மா, அம்மா என்று
ஆசையாய் எத்தனைமுறை அழைத்தாலும்
பாசமாய் புன்னகை சிந்தும் ஓரு
அதிசயம் அது அம்மா.,!
அனாதைகள் என்று ஒதுக்கிய
உலகம் மறந்து உறங்கையிலே
கனவின் மீதியாய் கண்கலோர கண்ணீரில்
என்றும் ஆதரவாய் ஓரு சொந்தம் அது அம்மா..!!
தோல்வியால் நாம் அழுகையிலேயே மடிசாய்த்து..
உன்னால் மட்டுமே முடியும் எனசொல்லி..
நம் கண்ணீர் துடைத்தபடியாய் கண்ணீர் சிந்தும்...
கவிதை அது அம்மா..,
என்றேனும் முதியோர் இல்லம்வரும் பிள்ளைக்காய்...
அழுத மனம் முழுக்க ஆசிதந்து...
குழந்தையாய் புன்னகைத்தபடியே....
குதூகலிக்கும் குழந்தை அது அம்மா..,
உங்கள் சேவகன்...
..laajee..,
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
குழந்தையாய் மாறி கவிதை எழுதிருக்க.. "அம்மா" என்று அழைக்கும் மழலையின் மொழியாய் உன் கவிதை..
//தோல்வியால் நாம் அழுகையிலேயே மடிசாய்த்து..
உன்னால் மட்டுமே முடியும் எனசொல்லி..
நம் கண்ணீர் துடைத்தபடியாய் கண்ணீர் சிந்தும்...
கவிதை அது அம்மா..,//
அழகு..
இன்னும் இன்னும் திருத்தமாய் தீட்டு உன் மழலை மொழிகளை..
உலகம் வரை எட்டட்டும்..
Photo-kaga thaniya oru spl applause.. i loved it!!!!!
Post a Comment